Skip to content
Home » வங்க கடலில் நாளை உருவாகிறது புயல் சின்னம்

வங்க கடலில் நாளை உருவாகிறது புயல் சின்னம்

  • by Senthil

வங்கக்கடலில் காற்றழுத்த தாழ்வு பகுதி வலுப்பெற்று காற்றழுத்த தாழ்வு மண்டலமாகி  இன்று ஆழ்ந்த காற்றழுத்த தாழ்வு மண்டலமாக வலுப்பெற்றது. அடுத்த கட்டமாக அது நாளை புயலாக  மாறும். அப்போது அதற்கு  சவுதி அரேபியா பரிந்துரை செய்த பெங்கல் என பெயரிடப்படும்.   இந்த புயல் தமிழகத்தை  நோக்கி நகர்ந்து வருகிறது.  தற்போது இந்த காற்றழுத்த தாழ்வு மண்டலம் நாகைக்கு 590 கி.மீ தொலைவில் உள்ளது. மணிக்கு 12 கி.மீ. வேகத்தில் நகருகிறது. இதன் காரணமாக தமிழகத்தில் வரும் 29-ம் தேதி வரை கனமழை பெய்ய வாய்ப்பு உள்ளது என வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.

இன்றே தமிழகத்தில் பல மாவட்டங்களில்  மழை பெய்து வருகிறது. குறிப்பாக நாகை,  மயிலாடுதுறை, தஞ்சை, திருவாரூர் மாவட்டங்களில் கனமழை பெய்கிறது. சென்னையில் பலத்த  காற்றுடன் மழை கொட்டுகிறது. இதனால்  சென்னை விமான நிலையத்தில்  விமானங்கள் இறங்க முடியாத நிலையில்  12க்கும் மேற்பட்ட  விமானங்கள்  வானத்தில் வட்டமடித்தன.  பின்னர் ஒன்றன் பின் ஒன்றாக  ஒவ்வொரு விமானமாக தரை  இறங்கியது. தமிழ் நாட்டில் உள்ள அனைத்து துறைமுகங்களிலும் புயல் எச்சரிக்கை கூண்டு ஏற்றப்பட்டுள்ளது.

காஞ்சிபுரம், திருவள்ளூர், சென்னை, செங்கல்பட்டு உள்ளிட்ட பகுதிகளிலும் மழை டிசம்பர் 1-ம் தேதி வரை நீடிக்க வாய்ப்புள்ளது. காற்றழுத்த தாழ்வு நிலை சென்னைக்கு அருகில் கரையை கடந்தால் இந்தப் பகுதிகளில் கனமழை பதிவாகும்.

இந்த மழை மூலம் சென்னையின் நீர் ஆதாரங்கள் பெறுகின்ற மழை நீர் 2025-ம் ஆண்டை சமாளிக்க உதவும். நீர்ப்பிடிப்பு பகுதிகளான பூண்டி, செம்பரம்பாக்கம் மற்றும் ரெட்ஹில்ஸ் பகுதிகளில் அதிக மழை இருக்கும் என எதிர்பார்க்கிறேன்.

இப்போதைக்கு தமிழகத்தின் உட்புற மாவட்டங்களில் மழை பொழிவு இருக்காது. கடலோர மாவட்டங்கள் மற்றும் அதை ஒட்டியுள்ள பகுதிகளில் மழை பொழியும். காற்றழுத்த தாழ்வு நிலை கரையை கடந்த பிறகே உட்புற மாவட்டங்களில் மழை இருக்கக்கூடும். தென் தமிழகத்தில் ராமநாதபுரம் வரை மழை இருக்கக்கூடும்.

இந்த காற்றழுத்த தாழ்வு நிலையால் வேகமாக காற்று வீசும் அபாயம் இல்லை. மழை பொழிவு அதிகம் இருக்கும் என்பதே அச்சுறுத்தல். எப்போதும் போல இந்த காற்றழுத்த தாழ்வு நிலை இலங்கையை கடக்காது. இருப்பினும் வடக்கு மற்றும் வடகிழக்கு இலங்கையில் மழை பொழிவு இருக்கும்” எனத் தெரிவித்துள்ளார்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

error: Content is protected !!