மேற்கு மத்திய வங்காள விரிகுடாவில் ஒரு காற்றழுத்த தாழ்வு நிலை உருவாகியுள்ளது. இது அடுத்த 24 மணி நேரத்தில் ஆழ்ந்த காற்றழுத்த தாழ்வு மண்டலமாக வலுப்பெறும் என சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.மேலும் இது வடமேற்கு,வடக்கு -வடகிழக்கு திசையில் நகரக்கூடும் என்பதால் ஒன்பது துறைமுகங்களில் ஒன்றாம் எண் புயல் எச்சரிக்கை கூண்டு ஏற்றப்பட்டுள்ளது. புயல் உருவாகக்கூடிய திடீர் காற்றோடு கூடிய மழை உள்ள வானிலை பகுதி என்பதை குறிக்கும் வகையில்
சென்னை, கடலூர், நாகை ,எண்ணூர், காட்டுப்பள்ளி, புதுச்சேரி, காரைக்கால், பாம்பன், தூத்துக்குடி உள்ளிட்ட 9 துறைமுகங்களில் ஒன்றாம் எண் புயல் எச்சரிக்கை கூண்டு ஏற்றப்பட்டுள்ளது. இலையில் ஏற்கனவே மீன்வளத்துறை சார்பில் ஆழ்கடல் மீன்பிடிப்பிற்கு சென்ற மீனவர்கள் கரை திரும்பவும் புதிதாக விசை படகில் மீனவர்கள் கடலுக்கு செல்ல வேண்டாம் எனவும் அறிவிப்பு விடுக்கப்பட்டுள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.