பாஜ மாநில துணைத் தலைவர் நாராயணன் திருப்பதி இன்று வெளியிட்ட ட்விட்டர் பதிவில் ‘பாஜக – திமுக கூட்டணி வரும். திமுகவும், பாஜகவும் ஒன்றுதான்’ என அதிமுக முன்னாள் அமைச்சர் சி.வி.சண்முகம் கூறியுள்ளது வன்மையாக கண்டிக்கத்தக்கது. தமிழகத்தில் திமுக அரசின் செயல்பாடுகளை மாநிலத் தலைவர் அண்ணாமலை தலைமையில் பாஜக கடுமையாக விமர்சித்து வருவதோடு, ஆக்கப்பூர்வ எதிர்க்கட்சியாகவும் போராடி வருகிறது.பாஜக எப்போது, யாருடன் கூட்டணி வைக்க வேண்டும் என்பதற்கு சி.வி.சண்முகத்தின் அறிவுரையோ, ஆலோசனையோ தேவையில்லை. அதற்கான உரிமை, தகுதியும் அவருக்கு இல்லை.
காவி துண்டு போட்டவன் பாஜகதொண்டன் என்றெல்லாம் நிதான மில்லாமல் பேசியிருப்பதும் அவரது பொறுப்பற்ற தன்மையை வெளிப்படுத்துகிறது. வருங்காலத்தில் பாஜக குறித்த விமர்சனங்களை தவிர்ப்பார் என்று கருதுகிறேன். இவ்வாறு அவர் தெரிவித்துள்ளார். ஏற்கனவே சிவிஎஸ்சிற்கு பதிலளித்த பாஜக மாநில தலைவர் அண்ணாமலை, ஒரு கட்சியின் கூட்டணி விவகாரம் தொடர்பாக, அந்த தலைமை தான் முடிவு செய்ய வேண்டும். எனவே, சி.வி.சண்முகம் பாஜகவில் இணைந்து விட்டாரா என தனக்கு தெரியவில்லை என பதில் கூறியிருந்தார் என்பது குறிப்பிடதக்கது…