தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலின் குறித்து, அதிமுக முன்னாள் அமைச்சர் சி.வி.சண்முகம் அவதூறாக பேசியதை கண்டித்து, திமுக சார்பில் ஐகோர்ட்டில் வழக்கு தொடரப்பட்டது. இந்த வழக்கை ரத்து செய்ய வேண்டும் என சி.வி. சண்முகம் தரப்பில் மனு தாக்கல் செய்யப்பட்டது. அதை ஐகோர்ட் தள்ளுபடி செய்தது.
இதை எதிர்த்து சி.வி. சண்முகம் உச்சநீதிமன்றத்தில் மேல்முறையீடு செய்தார். இந்த மனுவை விசாரித்த உச்சநீதிமன்றம், சி.வி. சண்முகம் பேச்சு மிக மோசமானது. அவரது பேச்சு தவறானது, அவர் மிகவும் பொறுப்புடன் செயல்பட வேண்டும் என்றும். இதற்காக அவர் பொது நலன் கருதி நிபந்தனையற்ற மன்னிப்பு கேட்க வேண்டும்.மன்னிப்பு கோரி பிரமாண பத்திரம் அக்டோபர் 15ல் தாக்கல்செய்ய வேண்டும் எனவும் உச்சநீதிமன்றம் உத்தரவிட்டது.