Skip to content
Home » நடு ரோட்டில் தர்ணா…….சி.வி. சண்முகம் எம்.பி. கைது

நடு ரோட்டில் தர்ணா…….சி.வி. சண்முகம் எம்.பி. கைது

  • by Senthil

 முன்னாள் அமைச்சரும், எம்பியுமான சி.வி.சண்முகம் இன்று (அக்.25) காலையில் விழுப்புரம் காவல் கண்காணிப்பாளர் அலுவலகத்துக்கு வந்திருந்தார். அவர் வந்த சமயத்தில் அலுவலகத்தில் எஸ்பி இல்லாததால் அவருக்காக பார்வையாளர்கள் அறையில் காத்திருந்தார். நீண்ட நேரமாகியும் எஸ்பி-யை சந்திக்க முடியாமல் போனதால் மதியம் 12 மணியளவில் விழுப்புரம் ஆட்சியர் அலுவலக பெருந்திட்ட வளாகத்தின் நுழைவாயில் முன் சி.வி.சண்முகம் தர்ணாவில் ஈடுபட்டார்.

அப்போது அவர் செய்தியாளர்களிடம் கூறியதாவது: கடந்த நாடாளுமன்றத் தேர்தல், விக்கிரவாண்டி இடைத் தேர்தல் சமயங்களிலும் இதுபோல எனக்கு எதிராக அவதூறு பரப்பினர். இது தொடர்பாக திமுக ஆட்சி பொறுப்பேற்றது முதல் இதுவரை தொடர்ந்து 23 புகார்கள் அளித்துள்ளேன். எந்த புகாரின் மீதும் நடவடிக்கையில்லை. என் மீது இந்த அரசு வழக்குப் பதிவுசெய்வதில் காட்டும் முனைப்பை, நான் அளிக்கும் புகார் மீது நடவடிக்கை எடுப்பதில் காட்டுவதில்லை. நான் எஸ்பி-யை சந்திக்க முன்கூட்டியே அனுமதி வாங்கி இருந்தும் அவர் திட்டமிட்டு என்னைச் சந்திக்காமல் தவிர்த்துள்ளார்.

முன்னாள் அமைச்சரும், வழக்கறிஞரும், மாநிலங்களவை உறுப்பினருமான நான் அளிக்கும் புகார்கள் மீதே நடவடிக்கை எடுக்கப்படவில்லை என்றால் பொதுமக்களின் நிலை என்ன? பின்னர், விழுப்புரம் தாலுகா இன்ஸ்பெக்டர் செல்வவிநாயகம், மாவட்ட குற்றப்பிரிவு டிஎஸ்பி-யான ராமலிங்கம் ஆகியோர் சி.வி.சண்முகத்திடம் சமாதானப் பேச்சுவார்த்தை நடத்தினர். ஆனால், அந்த சமாதானத்தை எல்லாம் ஏற்காத அவர், “எஸ்பி நேரில் வரும் வரை தர்ணா போராட்டம் தொடரும்,” எனக்கூறி போராட்டத்தை தொடர்ந்தார்.

இதனை தொடர்ந்து பிற்பகல் 1 மணிக்கு விழுப்புரம் தாலுகா போலீஸார் அனுமதியின்றி தர்ணா போராட்டம் நடத்தியதாக  சி.வி. சண்முகத்தை கைது செய்தனர்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

error: Content is protected !!