Skip to content
Home » நடிகை அமலாபால் மகனின் க்யூட் போட்டோ….

நடிகை அமலாபால் மகனின் க்யூட் போட்டோ….

  • by Authour

நடிகை அமலாபால் தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் தனது குழந்தையின் புகைப்படத்தை பதிவு செய்துள்ளார். அந்த குழந்தையின் கியூட் புகைப்படங்கள் இணையத்தில் வைரல் ஆகி வருகிறது. தமிழ் உள்பட தென்னிந்திய மொழிகளில் முன்னணி நடிகையாக இருந்த அமலாபால், கடந்த 2023 ஆம் ஆண்டு தேசாய் என்பவரை திருமணம் செய்து கொண்டார். இந்த தம்பதிக்கு சமீபத்தில் ஆண் குழந்தை பிறந்தது. அந்த குழந்தைக்கு “இலை” என்று பெயர் வைத்தனர்.இந்த நிலையில், அவ்வப்போது தனது மகனுடன் இருக்கும் புகைப்படங்களை அமலாபால் தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் பதிவு செய்து வருகிறார்.

 சற்றுமுன், அவர் தனது மகனுக்கு வேஷ்டி சட்டை அணிந்து இருக்கும் புகைப்படத்தை பதிவு செய்துள்ளார். இந்த புகைப்படம் பதிவு செய்த சில
amala paul
நிமிடங்களில் ஏராளமான லைக்ஸ் மற்றும் கமெண்ட்ஸ் குவிந்து வருகிறது. நடிகை அமலாபால் நடித்த “லெவல் கிளாஸ்” என்ற திரைப்படம் கடந்த ஆண்டு வெளியாகி நல்ல வரவேற்பு பெற்றது. தற்போது, அவர் இன்னொரு மலையாள படத்தில் நடித்துக் கொண்டிருக்கிறார். அந்த படம் விரைவில் வெளியாக உள்ளது.