கடலூர் திருவந்திபுரம் பகுதியில் கடந்த 24ஆம் தேதி இரவு நடைபெற்ற பிறந்தநாள் நிகழ்ச்சியில் ரௌடி சூர்யா என்பவர் திடீரென சென்று பட்டாக்கத்தியுடன் நடனம் ஆடினார். அதன் பிறகு அங்கு இருந்த நாற்காலிகளை உடைத்த அவர் சிறிது நேரம் கழித்து தனது நண்பர்களுடன் இரண்டு சக்கர வாகனத்தில் பட்டாக்கத்தியை சுற்றியபடி ரோட்டில் சென்றார். அப்போது சாலையில் 2 சக்கர வாகனத்தில் வந்து கொண்டிருந்த பிரகாஷ் என்பவரின் முகத்தில் கத்தி பட்டதால் அவர் படுகாயம் அடைந்து மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகிறார். இந்த நிலையில் இந்த சம்பவம் குறித்து கடலூர் திருப்பாதிரிப்புலியூர் போலீசார் வழக்குப்பதிந்து ரவுடி சூர்யாவை தேடி வந்தனர். அவரை திருவந்திபுரம் பகுதியில் போலீஸார் பிடிக்க முற்பட்டபோது கீழே விழுந்ததில் அவருடைய கை மற்றும் கால் எலும்பு முறிவு ஏற்பட்டு கடலூர் அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார்.
கடலூர் அரசு மருத்துவமனையில் போலீஸ் பாதுகாப்புடன் கைதிகள் பிரிவில் அவர் சிகிச்சை பெற்று வரும் நிலையை கடந்த ஒன்றாம் தேதி இரவு தன்னுடைய பிறந்தநாளை கொண்டாடும் விதமாக தன்னுடைய மனைவி உடன் அவர் கை கால் கட்டுடன் கேக் வெட்டி கொண்டாடிய சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. மேலும் இந்த வீடியோ தற்போது வெளியாகி உள்ளது. காவல்துறை வட்டாரத்தில் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. போலீஸ் பாதுகாப்பில் இருந்த கைதி தனது மனைவி உடன் பிறந்த நாள் கேக் வெட்டிய வீடியோ வெளியான நிலையில் இது குறித்து காவல்துறையினர் தீவிர விசாரணை மேற்கொண்டு வருவதுடன் அப்போது பணியில் இருந்த போலீசாரிடமும் ப காவல்துறை அதிகாரிகள் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். கைதி ஒருவர் போலீஸ் பாதுகாப்பில் மனைவியுடன் பிறந்தநாள் கேக் வெட்டிய சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்திய நிலையில், இச்சம்பவத்தை தடுக்கத்தவறிய 3 போலீசார் சஸ்பென்ட் செய்யப்பட்டுள்ளனர்.