Skip to content
Home » ரூ.1000 லஞ்சம்…பெண் விஏஓ கைது…

ரூ.1000 லஞ்சம்…பெண் விஏஓ கைது…

  • by Senthil

விழுப்புரம் மாவட்டம் திருக்கை அருகே நகர் கிராமத்தை சேர்ந்த அருளாந்து மனைவி அன்னம்மாள் என்பவரின் மாமனார் மாணிக்கம், அவரது கணவரின் அண்ணன் சவுரிமுத்து ஆகிய இருவரும் சுமார் 35 ஆண்டுகளுக்கு முன்பு இறந்துவிட்டனர். அப்போது விபரம் தெரியாததால் இறப்பு சான்றிதழ் பதிவு செய்ய தவறிவிட்டார்.

கடந்த 2020ம் ஆண்டு டிசம்பர் மாதம் இருவருக்கும் இறப்பு சான்றிதழ் கேட்டு தனித்தனியே விழுப்புரம் கோட்டாட்சியரிடம் மனுக்கள் கொடுத்தனர். அரியலூர் கிராம நிர்வாக அலுவலர் சங்கீதாவை நேரில் சந்தித்து இறப்பு சான்றிதழ் சம்பந்தமாக ஆன்லைனில் பதிவு செய்ய அன்னம்மாள் கேட்டுள்ளார். அப்போது அன்னம்மாளிடம் மனு கொடுத்து கண்டுகொள்ளாமல் விட்டால் எப்படி, ஆன்லைனில் பதிவு செய்வது நான் தான் என்றும் ஆன்லைனின் பதிவு செய்ய தலா 500 வீதம் இருவருக்கும் ரூ.1,000 லஞ்சமாக கேட்டுள்ளார். லஞ்சம் தர விருப்பமில்லாததால் அன்னம்மாள், விழுப்புரம் ஊழல் தடுப்பு மற்றும் கண்காணிப்பு அலுவலகத்தில் நேற்று முன்தினம் புகார் அளித்துள்ளார்.

விழுப்புரம் லஞ்ச ஒழிப்புத்துறை டிஎஸ்பி பால்சுதர் தலைமையிலான போலீசார் ரசாயனம் தடவிய ரூ.1,000 பணத்தை அன்னம்மாளிடம் கொடுத்து விஏஓவிடம் கொடுக்கும் படி கூறியுள்ளனர். இதையடுத்து நேற்று மதியம் அன்னம்மாள் விஏஓவிடம் ரசாயனம் தடவிய பணத்தை லஞ்சமாக கொடுத்தபோது விஏஓ அதனை பெற்றதும் அங்கு மறைந்திருந்த லஞ்ச ஒழிப்புத்துறை போலீசார் கையும் களவுமாக விஏஓ சங்கீதாவை பிடித்து கைது செய்தனர். மேலும் அவரை விழுப்புரம் ஊழல் தடுப்பு மற்றும் கண்காணிப்பு பிரிவு அலுவலகத்திற்கு அழைத்து சென்று விசாரணை செய்து வருகின்றனர்.

 

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

error: Content is protected !!