திருச்சி கோப்பு மேல தெருவை சேர்ந்தவர் அருள்ராஜ்,இவரது மகன் மகிழ் மித்திரன் ( 3) இவன் கடந்த ஒரு வாரத்துக்கு முன்பு திருச்சி பாலக்கரை கீழப்புதூர் பகுதியில் உள்ள தாத்தா வீட்டிற்கு வந்து தங்கி இருந்தான். இந்நிலையில் நேற்று மகிழ்மித்திரன் வீட்டில் விளையாடு கொண்டிருந்தார். அப் பொழுது வீட்டிற்கு வெளியே எர்த் வயரை தெரியாமல் தொட்டுவிட்டார். இதனால் திடீரென்று அதிலிருந்து மின்சாரம் பாய்ந்து மகிழ் மித்திரன் மயங்கி விழுந்தார். இதை யடுத்து சிறுவனை திருச்சி அரசு மருத்துவமனைக்கு அழைத்துச் சென்றனர். ஆனால் அங்கு சிறுவனை பரிசோதனை செய்து பார்த்த டாக்டர் இறந்து விட்டதாக கூறினார். இந்த சம்பவம் குறித்து பாலக்கரை போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
தாத்தா வீட்டுக்கு சென்ற திருச்சி சிறுவன் மின்சாரம் தாங்கி பலி..
- by Authour
