திருச்சி மாவட்டம் மண்ணச்சநல்லூர் அருகே தொடர் மழையின் காரணமாக சம்பா சாகுபடி பயிர்கள் நீரில் மூழ்கியும்,விளைந்த பயிர்கள் சாய்ந்து உள்ளது. இதனால் விவசாயிகள் வேதனை அடைந்து வருகின்றனர். அரசு சாகுபடி பயிர்களுக்கு உரிய நிவாரணம் வழங்க வேண்டும் என்று வேண்டுகோள் விடுத்துள்ளனர். திருச்சி மாவட்டத்தில் குறிப்பாக திருச்சி மாநகரில் விடிய விடிய பலத்த மழை
பெய்தது.காலையிலும் தொடர்ந்து அந்த மழை நீடித்து வருகிறது.தொடர்ந்து இடைவிடாது பெய்து வரும் கனத்த மழையால் சாலைகளில் மழைநீர் பெருக்கெடுத்து ஓடுகிறது.தாழ்வான பகுதிகளில் மழை நீர் தேங்கியுள்ளது. திருச்சியில் சில இடங்களில் வீடுகளுக்குள் தண்ணீர் புகுந்துள்ளது.இதனால் பொதுமக்கள் கடும் அவதிக்குள்ளாகினர். புறநகர் பகுதிகளில் நெற்பயிர்களும் நீரில் மூழ்கியுள்ளன.தொடர்ந்து மழை பெய்து வருவதால் வியாபாரிகள் பொதுமக்களின் வாழ்வாதாரம் பாதிக்கப்பட்டுள்ளது.