Skip to content
Home » கடலூர் 3 பேர் கொலையில்…. அதே பகுதியை சேர்ந்த 2 வாலிபர்கள் கைது

கடலூர் 3 பேர் கொலையில்…. அதே பகுதியை சேர்ந்த 2 வாலிபர்கள் கைது

  • by Senthil

கடலூரில் 3 பேர் எரித்துக் கொலை செய்யப்பட்ட சம்பவம் தொடர்பாக 2 இளைஞர்களிடம் போலீசார் தீவிர விசாரணை நடத்தி வருகின்றனர்.

கடலூர் மாவட்டம் நெல்லிக்குப்பம் காவல் நிலைய சரகம் காராமணிகுப்பம் சீத்தாராம் நகரில் 15.7.24 தேதி அன்று காலை பூட்டிய வீட்டில் நெருப்பு புகை வருவதாக தகவல் கிடைத்தவுடன் கடலூர் மாவட்ட காவல் கண்காணிப்பாளர் ராஜாராம், கூடுதல் காவல் கண்காணிப்பாளர் பிரபாகரன், பண்ருட்டி துணை காவல் கண்காணிப்பாளர் பழனி, நெல்லிக்குப்பம் காவல் ஆய்வாளர் மற்றும் போலீசார் சம்பவ  இடத்துக்கு வந்து விசாரணை நடத்தினர்.

விசாரணையில் அந்த வீட்டில் வசித்து வந்த  கமலேஸ்வரி(62),   அவரது மகன் சுதன்குமார்(40) பேரன்  நிஷாந்த் (10) ஆகியோர் கத்தியால் வெட்டப்பட்டு, எரிந்த நிலையில் இருந்ததை கண்டு காவல்துறை தடய அறிவியல் நிபுணர்கள், கைரேகை நிபுணர்கள், மோப்பநாய் பிரிவினர் மற்றும் சைபர் கிரைம் காவல்துறையினர் உடனடியாக வரவழைக்கப்பட்டனர்.  விசாரணை முடுக்கி விடப்பட்டது.

 

இது சம்பந்தமாக கூடுதல் காவல் கண்காணிப்பாளர் பிரபாகரனின் மேற்பார்வையில் 5 தனிப்படைகள் அமைக்கப்பட்டு பல்வேறு கோணங்களில் தீவிர புலன்விசாரணை மேற்கொள்ளப்பட்டது இவ்வழக்கில் இப்போது 2 பேர் கைது செய்யப்பட்டனர். அவர்களது பெயர் விவரம் வருமாறு:
  சங்கர் ஆனந்த்(21),  காராமணிகுப்பம் பழனி மகன்.  அதே பகுதியை சேர்ந்த  முகமது அலி மகன் சாகுல் அமீது.இவர்கள் தான் இந்த கொலையை செய்தவர்கள் என தெரியவந்துள்ளது.
 சங்கர் ஆனந்த்தின் தாயார் தற்கொலை செய்து கொண்டாராம். இதற்கு  சுதன்குமார் குடும்பத்தினர் தான் காரணம் என  சங்கர் ஆன்நத் கருதினார்.  எனவே அதற்கு பழிக்குப்பழியாக இந்த கொலையை செய்ததாக அவர் போலீசாரிடம் கூறி உள்ளார்.
இந்த கொலைக்கு தனக்கு உதவியாக  நண்பர்  சாகுல் அமீதையும் அழைத்து வந்ததாகவும் தெரிவித்து உள்ளார்.   எந்த தடயங்களும் இல்லாத நிலையில் இந்த கொலையில் போலீசார்3 நாளில் துப்புதுலக்கி குற்றவாளிகளை கைது செய்துள்ளனர்.

 

 

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

error: Content is protected !!