ஐபிஎல் கிரிக்கெட்டில் இன்று சிஎஸ்கே, டெல்லி அணிகள் மோதின. முதலில் விளையாடிய சிஎஸ்கே 3 விக்கெட்டுகளை இழந்து 223 ரன்கள் குவித்தது. அதிகபட்சமாக டெவான் கான்வே 87, ருத்ராஜ் கெய்க்வாட் 79 ரன்கள் எடுத்தனர். பின்னர் ஆடிய டெல்லி 20 ஓவர்களில் அனைத்து விக்கெட்டுகளையும் இழந்து 146 ரன்களே எடுத்தது. இதனால் 77 ரன் வித்தியாசத்தில் சிஎஸ்கே வென்றது. டெல்லி கேப்டன் வார்னர் அதிகபட்சமாக 86 ரன்கள் எடுத்தார். இந்த ஆட்டத்தில் வென்றால் தான், பிளேஆப் சுற்றில் நுழைய முடியும் என்று இருந்த நிலையில், சிஎஸ்கே அணி இந்த வெற்றியை பெற்று கம்பீரமாக பிளேஆப் சுற்றுக்குள் நுழைந்தது. இதன்மூலம் சிஎஸ்கே அணி ரசிகர்கள் மகிழ்ச்சி அடைந்துள்ளனர்.
Tags:சென்னை அணி வெற்றி