Skip to content

5 தொடர் தோல்வி, மீண்டும் எழுச்சி பெறுமா சிஎஸ்கே?

  • by Authour

ஐபிஎல் கிரிக்​கெட்​டின் லீக் ஆட்​டம்  நடந்து வருகிறது.  இந்த போட்டியில்  இதுவரை  சென்னை சிஎஸ்கே அணி6 போட்டிகளில் ஆடி  ஒன்றில் மட்டுமே வெற்றி பெற்று உள்ளது.   இப்படிப்பட்ட 5 தொடர் தொல்விகளை சிஎஸ்கே இதுவரை சந்தித்தது இல்லை. இந்த நிலையில்  7வது போட்டியில் இன்று சென்னை அணி , லக்னோவுடன் ஆடுகிறது.  இரவு 7.30 மணிக்கு இந்​தப் போட்டி  லக்னோவில் நடை​பெறவுள்​ளது.

இந்த ஆட்​டத்​தில் தொடக்க வீரர்​கள் ரச்​சின் ரவீந்​தி​ரா, டேவன் கான்​வே, ராகுல் திரி​பா​தி, அஸ்​வின், ரவீந்​திர ஜடேஜா, தீபக் ஹூடா ஆகியோர் மிக​வும் மோச​மாக விளை​யாடி ஆட்​ட​மிழந்​தனர். விஜய் சங்​கரும், ஷிவம் துபே​வும் ஓரளவுக்கு நிலைத்து விளை​யாடி ரன்​களைச் சேர்த்​தனர்.

தொடக்க வீரர் ரச்​சின் ரவீந்​தி​ரா, டேவன் கான்​வே, ராகுல் திரி​பா​தி, ஷிவம் துபே ஆகியோரிடருந்து அதிரடி​யான இன்​னிங்ஸ் இன்று வெளிப்பட்டால்​தான் அந்த அணி வெற்​றிப்​பாதைக்​குத் திரும்ப முடி​யும்.  அதற்கான வாய்ப்பு இருக்கிறதா என்று தெரியவில்லை.

அதே​போல் பவுலிங்​கிலும் சிஎஸ்கே அணி மோச​மான நிலை​யில் உள்​ளது. சிஎஸ்கே வீரர்​கள் கலீல் அகமது, அன்​ஷுல் காம்​போஜ், ரவிச்​சந்​திரன் அஸ்​வின், ரவீந்​திர ஜடேஜா ஆகியோரிட​மிருந்து சிறப்​பான பந்​து​வீச்சு வெளிப்​பட்​டால் அந்த அணிக்கு வெற்றி எளி​தாகும்.

சென்னை அணிக்கு இன்​னும் 8 ஆட்​டங்​கள் மட்​டுமே எஞ்​சி​யுள்​ளன. இந்த 8 ஆட்​டங்​களில் குறைந்​தது 7-ல் சிஎஸ்கே அணி வெற்றி பெற்​றால் மட்​டுமே அந்த அணி பிளே ஆஃப் சுற்று வாய்ப்​பில் நுழைய முடி​யும். எனவே, இன்​றைய ஆட்​டத்​தில் சிஎஸ்கே அணி வெற்​றிக்​காக கடுமை​யாகப் போராடும் என்று எதிர்​பார்க்​கலாம்.

சிஎஸ்கே அணி​யில் நூர் அகமது மட்​டுமே இது​வரை சிறப்​பாக பந்​து​வீசி வரு​கிறார். அவர் இது​வரை 12 விக்​கெட்​களைச் சாய்த்​துள்​ளார். எனவே, லக்​னோவுக்கு எதி​ரான இந்த ஆட்​டத்​தி​லும் நூர் அகமது சிறப்​பாக பந்​து​வீசு​வார் என்று எதிர்​பார்க்​கலாம்.

அதே​நேரத்​தில் கடந்த 3 ஆட்​டங்​களில் தொடர்ச்​சி​யாக வெற்றி பெற்ற உற்​சாகத்​தில் லக்னோ அணி களமிறங்​கு​கிறது. அந்த அணி இது​வரை 6 போட்​டிகளில் விளை​யாடி 4-ல் வெற்​றி, 2-ல் தோல்​வியைப் பெற்​றுள்​ளது. கடந்த ஆட்​டத்​தில் லக்னோ அணி 6 விக்​கெட்​கள் வித்​தி​யாசத்​தில் பலம் ​வாய்ந்த குஜ​ராத் அணியை அதன் சொந்த மைதானத்​திலேயே வீழ்த்​தி​யுள்​ளது.

சிஎஸ்கே அணியின் தொடர் தோல்வியில் அதன் ரசிகர்கள்  அந்த அணியின்  ரசிகர்களாக தொடர்ந்து  நீடிப்பதா என்று யோசிக்கத் தொடங்கி விட்டனர்.   பெரும்பலான ரசிகர்கள்  சிஎஸ்கே  போட்டியை பார்க்க வந்ததே தப்பு என்று பேட்டி கொடுக்கிறார்கள். தற்போது சென்னை புள்ளிபட்டியலில் கடைசி இடத்தில் உள்ளது.

இதே நிலை நீடித்தால்,  சிஎஸ்கேவில் உள்ள  இளம் வீரர்களின் எதிர்காலமும் வீணாகிவிடும் என்று அவர்களும் யோசிக்கத் தொடங்கி விட்டனர்.  சிஎஸ்கே பிளே ஆப் சுற்றுக்குள் நுழைய வாய்ப்பு இல்லை என்றே  அதன் ரசிகர்கள்  கூறி வருகிறார்கள்.

டெல்லியில் நேற்று இரவு நடந்த போட்டியில் மும்பை,   டெல்லி அணிகள் மோதின. இதுவரை 4 போட்டிகளில் வென்று தோல்வியே காணாத   டெல்லி  நேற்று மும்பையிடம் தோற்று போனது.    முதலில் பேட் செய்த மும்பை 205 ரன்கள் எடுத்தது. அடுத்து ஆடிய டெல்லி  19 ஓவர்களில் 193 ரன்கள் எடுத்து ஆல் அவுட் ஆனது.  இத்தனைக்கு மும்பை  4 தோல்விகளை சந்தித்து  ஒரு வெற்றியை மட்டுமே பெற்றிருந்த நிலையில் நேற்று மீண்டும் வெற்றியை ருசித்து உள்ளது.

அதே நிலை  இன்று சென்னைக்கு ஏற்பட்டால், அந்த அணிக்கு  ஒரு வாய்ப்பு உள்ளது. இல்லாவிட்டால்  சிஎஸ்கே   தொடர்ந்து புள்ளிப்பட்டியலில் கடைசி இடத்தில் தான் நீடிக்கும். இதற்காக  டோனி என்ன யுக்தி வைத்திருக்கிறார் என்பது இன்று  இரவு தெரியவரும்.

 

 

error: Content is protected !!