ஐபிஎல் போட்டிகளில் இன்று சென்னை சேப்பாக்கத்தில் 61-வது லீக் ஆட்டத்தில் நடப்பு சாம்பியன் சென்னை சூப்பர் கிங்ஸ் – முன்னாள் சாம்பியன் ராஜஸ்தான் ராயல்ஸ் அணிகள் ஆடி வருகின்றன. முதலில் ராஜஸ்தான் அணி பேட் செய்து வருகிறது. இந்நிலையில், இந்த போட்டி முடிந்ததும் சென்னை அணி ரசிகர்கள் மைதானத்திலேயே இருக்க வேண்டுமென்று சென்னை அணி நிர்வாகம் வேண்டுகோள் விடுத்துள்ளது . ரசிகர்களுக்கு ஸ்பெஷலான ஒன்று இருக்கிறது எனவும் சென்னை அணி தனது எக்ஸ் பக்கத்தில் பதிவிட்டுள்ளது. இதனால் சென்னை அணி ரசிகர்கள் உற்சாகமடைந்துள்ளனர். இந்த நிலையில் சென்னை சூப்பர் கிங்ஸ் அணியில் விளையாடி வரும் தல தோனி இன்று தனது ஒய்வை அறிவிக்கப்போவதாக பரபரப்பு தகவல்கள் வெளியாகியுள்ளது.