தமிழ்நாடு முதலமைச்சர் மு.க. ஸ்டாலின் இன்று (6.6.2023) முகாம் அலுவலகத்தில், IPL – 2023 கிரிக்கெட் போட்டியில் சென்னை சூப்பர் கிங்ஸ் அணி வெற்றி பெற்றதையொட்டி அக்கோப்பையை இந்தியா சிமெண்ட்ஸ் நிறுவனத்தின் துணைத் தலைவர் மற்றும் மேலாண்மை இயக்குநர் என். சீனிவாசன், இந்தியா சிமெண்ட்ஸ் நிறுவனத்தின் முழு நேர இயக்குநர் ரூபா குருநாத் ஆகியோர் காண்பித்து வாழ்த்துப் பெற்றனர். இந்நிகழ்வின்போது இளைஞர் நலன் மற்றும் விளையாட்டு மேம்பாட்டுத் துறை அமைச்சர் உதயநிதி ஸ்டாலின், சென்னை சூப்பர் கிங்ஸ் கிரிக்கெட் லிமிடெட் தலைமை செயல் அலுவலர் காசி விஸ்வநாதன், இந்தியா சிமெண்ட்ஸ் நிறுவனத்தின் பெருநிறுவன விவகார அலுவலர் கே.எஸ். பாலாஜி, கோபிநாத் ஆகியோர் உடனிருந்தனர்.