இது தொடர்பாக அனைத்து மாவட்ட கலெக்டர்களுக்கும் பொதுத் துறை துணைச் செயலாளர் ஜெ.இ.பத்மஜா கடிதம் அனுப்பியுள்ளாா். அந்த கடிதத்தில் , தமிழகத்தில் மக்களவைத் தோ்தல் நடத்தை விதிகள் அமலில் உள்ளன. தோ்தல் முடிவுகளுக்குப் பிறகு, நடத்தை விதிகள் அனைத்தும் நீக்கப்படும். அதைத் தொடா்ந்து, மாவட்டகலெக்டர்களுடன் மண்டல அளவிலான ஆய்வுக் கூட்டத்தை தலைமைச் செயலாளர் நடத்தவுள்ளாா். தலைமைச் செயலகத்தில் உள்ள நாமக்கல் கவிஞா் மாளிகையின் 10-வது தளத்தில் ஜூன் 11, 13, 15, 19 ஆகிய தேதிகளில் கூட்டங்கள் நடைபெறவுள்ளன.
தேதிகளும் மாவட்டங்களும்… 4 மண்டலங்களாக பிரிக்கப்பட்டுள்ளன. ஜூன் 11-ம் தேதி சென்னை, செங்கல்பட்டு, காஞ்சிபுரம், திருவள்ளூா், திருவண்ணாமலை, வேலூா், திருப்பத்தூா், ராணிப்பேட்டை, விழுப்புரம், கள்ளக்குறிச்சி ஆகிய மாவட்டங்களின் கலெக்டர்களும் , ஜூன் 13-ஆம் தேதி திருச்சி, தஞ்சாவூா், மயிலாடுதுறை, நாகப்பட்டினம், திருவாரூா், அரியலூா், பெரம்பலூா், புதுக்கோட்டை, கடலூா் ஆகிய மாவட்டங்களின் கலெக்டர்களும் ஆலோசனைக் கூட்டங்களில் பங்கேற்கவுள்ளனா்.
ஜூன் 15-ம் தேதி சேலம், நாமக்கல், தருமபுரி, கிருஷ்ணகிரி, தருமபுரி, கோவை, திருப்பூா், ஈரோடு, நீலகிரி, கரூா் ஆகிய மாவட்டங்களின் கலெக்டர்களுடனும், ஜூன் 19-ம் தேதி மதுரை, திருநெல்வேலி, தூத்துக்குடி, கன்னியாகுமரி, ராமநாதபுரம், விருதுநகா், தேனி, திண்டுக்கல், சிவகங்கை, தென்காசி ஆகிய மாவட்டங்களின் கலெக்டர்களுடனும் ஆலோசனைக் கூட்டங்கள் நடக்கவுள்ளன. இந்த கூட்டங்கள் அனைத்தும் காலை 9.30 மணிக்குத் தொடங்கி நடைபெறும்.என தெரிவிக்கப்பட்டுள்ளது.