அரியலூர் மாவட்ட ஆட்சியர் அலுவலகத்திற்கு முன்பு தமிழக ஏரி மற்றும் ஆற்றுப் பாசன விவசாய சங்கத்தினர் மாநிலத் தலைவர் விஸ்வநாதன் தலைமையில் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர். இதில் பொன்னாற்று தலைப்பில் கொள்ளிடத்தில் தடுப்பணை கட்ட வேண்டும். உடையார்பாளையம் செந்துறை, ஆண்டிமடம் ஆகியவற்றை மையமாக கொண்டு முந்திரி தொழிற்சாலை அமைக்க வேண்டும். முந்திரிக்கு பயிர் காப்பீடு திட்டம் கொண்டு வர வேண்டும். செந்துறையில் முந்திரி பழச்சாறு தொழிற்சாலை அமைக்க வேண்டும் பயிர் கடனை தாமதம் இன்றி வழங்க நடவடிக்கை எடுக்க வேண்டும். மத்திய அரசு கொண்டுவந்துள்ள புதிய மின்சார திட்டத்தை வாபஸ் பெற வேண்டும். விவசாய மின் இணைப்பை காலம் தாழ்த்தாமல் வழங்க வேண்டும் உள்ளிட்ட 11 கோரிக்கைகளை வலியுறுத்தி ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.
முந்திரிக்கு பயிர் காப்பீடு திட்டம் கொண்டு வர வேண்டும்… விவசாயிகள் ஆர்ப்பாட்டம்..
- by Authour
