தமிழ்நாடு முதலமைச்சர் மு.க. ஸ்டாலின் இன்று (6.2.2023) தலைமைச் செயலகத்தில், பருவம் தவறி பெய்த திடீர் மழையினால் பாதிக்கப்பட்ட டெல்டா மாவட்டங்களில் பயிர் சேதங்களைப் பார்வையிட்டு ஆய்வு செய்வதற்காக அமைக்கப்பட்ட குழுவின் அமைச்சர்கள் வேளாண்மை மற்றும் உழவர் நலத்துறை அமைச்சர் எம்.ஆர்.கே.பன்னீர்செல்வம், உணவு மற்றும் உணவுப் பொருள் வழங்கல் துறை அமைச்சர் அர. சக்கரபாணி
ஆகியோர் சந்தித்து, பயிர் சேத விவரங்கள் குறித்த ஆய்வு அறிக்கையினை அளித்தார்கள். இந்நிகழ்வின்போது, தலைமைச் செயலாளர் முனைவர் வெ. இறையன்பு, வருவாய் நிருவாக ஆணையர் / கூடுதல் தலைமைச் செயலாளர் எஸ்.கே. பிரபாகர், கூட்டுறவு, உணவு மற்றும் நுகர்வோர் பாதுகாப்புத் துறை கூடுதல் தலைமைச் செயலாளர் மரு. ஜெ. ராதாகிருஷ்ணன், வேளாண்மை மற்றும் உழவர் நலத்துறை செயலாளர் சி. சமயமூர்த்தி, வேளாண்மைத் துறை இயக்குநர் ஏ. அண்ணாதுரை, மற்றும் அரசு உயர் அலுவலர்கள் உடனிருந்தனர்.