அரியலூர் மாவட்டம் ஜெயங்கொண்டம் அருகே உள்ள வீரசோழபுரம் கிராமத்தில் தீர்த்தகுளம் உள்ளது. அந்த குளத்தை பொதுமக்கள் குளிப்பது உள்ளிட்ட அன்றாட பயன்பாட்டிற்கு பயன்படுத்தி வந்தனர். மேலும் கால்நடைகள் தண்ணீர் குடிக்கவும், கால்நடைகளை குளிப்பாட்டவும், பொதுமக்கள் பயன்படுத்தி வருகின்றனர். இந்நிலையில் முதலை ஒன்று குளத்தில் இருந்து வெளியில் வந்துள்ளதை பார்த்த அப்பகுதி மக்கள் அதிர்ச்சி அடைந்தனர். இது குறித்து மீன்சுருட்டி போலீசாருக்கு தகவல் தெரிவித்துள்ளனர். மீன்சுருட்டி போலீசார், வனத்துறைக்கும், தீயணைப்பு துறைக்கும் தகவல் தெரிவித்துள்ளனர். வனத்துறை அதிகாரிகள் வருவதற்குள், முதலை மீண்டும் குளத்துக்குள் சென்று விடும் என்பதால், போலீசார் பொதுமக்கள் மற்றும் உள்ளூர் இளைஞர்கள் உதவியுடன் முதலையை பிடித்தனர். பின்னர் பிடிக்கப்பட்ட முதலை கொள்ளிடம் ஆற்று அணைக்கரை வடவாறு பகுதியில் விடப்பட்டது.
![](https://www.etamilnews.com/wp-content/uploads/2024/05/முதலை-2-930x620.jpg)