இந்திய கிரிக்கெட் அணியின் விக்கெட் கீப்பர் ,பேட்டர் சஞ்சு சாம்சன் , ஐபிஎல் போட்டிகளில் ராஜஸ்தான் அணியின் கேப்டனாக செயல்படுகிறார்.இவர் நடிகர் ரஜினிகாந்தின் ரசிகர் என பல்வேறு நேர்காணல்களில் தெரிவித்து உள்ளார். இந்நிலையில் நடிகர் ரஜினிகாந்தை சந்தித்து அவர் டுவிட்டரில் நெகிழ்ச்சி பதிவை வெளியிட்டுளள்ளார். சாம்சன் டுவிட்டர் பக்கத்தில், “7 வயதிலிருந்தே நான் நடிகர் ரஜினியின் ரசிகன் . கண்டிப்பாக ஒருநாள் ரஜினியை அவரது வீட்டில் சென்று சந்திப்பேன் என என் பெற்றோரிடம் கூறி வந்தேன். தற்போது தலைவர் ரஜினி என்னை அவரது வீட்டிற்கு அழைத்தார் தற்போது என் கனவு நனவானது” என குறிப்பிட்டுள்ளார்.
Tags:ரஜினியுடன் சந்திப்பு