Skip to content

கிரிக்கெட் வீரர் நிதிஷ்குமார், திருப்பதி கோவிலில் நூதன வேண்டுதல்

  • by Authour

ஐபிஎல் தொடர் மூலம் அறிமுகமாகி இந்திய அணியில் வாய்ப்பு கிடைத்து அதில் சாதித்து காட்டியவர் நிதிஷ்குமார் .  21 வயதான நிதிஷ்குமார்  இந்திய  அணிக்காக மூன்று டி20 போட்டிகளில் விளையாடி அதில் அதிகபட்சமாக 74 ரன்கள் அடித்திருக்கிறார். இதேபோன்று ஆஸ்திரேலியாவிற்கு எதிரான பார்டர் கவாஸ்கர் தொடரில்  இந்திய அணியின் ஆல்ரவுண்டராக 5 போட்டிகளிலும் நிதிஷ்குமார் பங்கேற்றார். இதில் பேட்டிங்கில் அவர் மொத்தமாக 298 ரன்கள் குவித்தார். இதில் மெல்போர்ன் டெஸ்டில் 114 ரன்கள் எடுத்தார்.

இதேபோன்று இந்த தொடரில் பந்து வீச்சில் ஐந்து விக்கெட்டுகளை அவர் வீழ்த்தினார். பார்டர் கவாஸ்கர் தொடரில் அதிக ரன்கள் அடித்த இரண்டாவது இந்திய வீரர் என்ற  பெருமையும் அவருக்கு கிடைத்தது. இதனால் அவர் இந்திய அணியில் குறிப்பிடத்தக்க ஒரு இடம் கிடைத்து விட்டது என்ற மகிழ்ச்சியில் உள்ளார்.

அதையொட்டி  திருப்பதி ஏழுமலையான் கோவிலில் நிதிஷ்குமார் முட்டி போட்டு படியில் ஏறி சுவாமி தரிசனம் செய்து கொண்ட நிகழ்வு  சமூகவலைதளத்தில் வைரலாகி வருகிறது. கிரிக்கெட் வீரர் ஒருவர் கடின நேர்த்திக்கடனை செலுத்தியதை பார்த்து அங்கிருந்து ரசிகர்கள் கோவிந்தா! கோவிந்தா என்று முழக்கமிட்டனர்.

error: Content is protected !!