உலக கோப்பை கிரிக்கெட் போட்டியின் அரை இறுதிப்போட்டி இன்று தொடங்குகிறது. முதல் அரை இறுதிப்போட்டி மும்பையில் இன்று நடக்கிறது. நாளை கொல்கத்தாவில் 2வது அரைஇறுதிப்போட்டி நடக்கிறது.
அரை இறுதிப்போட்டிகளில் மழை குறுக்கிட்டால் போட்டி மறுநாள் நடத்தப்படும். அப்போதும் மழை குறுக்கிட்டால் ஓவர்கள் குறைக்கப்படும். அதுவும் நடத்த முடியாமல் போய் விட்டால் லீக்கில் அதிக புள்ளிகள் பெற்ற அணிகள் வெற்றி பெற்றதாக அறிவிக்கப்படும்.
இறுதிப்போட்டி 19ம் தேதி மதியம் அகமதாபாத்தில் நடக்கிறது. இதில் வெற்றி பெற்று உலக கோப்பையை வெல்லும் அணிக்கு ரூ. 33 கோடி பரிசாக வழங்கப்படும். இரண்டாம் இடம் பிடிக்கும் அணிக்கு ரூ. 16.5 கோடி பரிசாக வழங்கப்படும் என அறிவிக்கப்பட்டுள்ளது.
உலகக் கோப்பை கிரிக்கெட் தொடருக்கான மொத்த பரிசுத் தொகை ரூ. 83.06 கோடி ஆகும். அரையிறுதிப் போட்டியில் தோல்வி அடைந்து வெளியேறும் இரு அணிகளுக்கும் தலா ரூ.6.64 கோடி வழங்கப்படும்.
இதுபோக, அரையிறுதிக்கு தகுதிபெறாமல் லீக் ஆட்டங்களின் முடிவில் வெளியேறும் 6 அணிகளுக்கும் தலா ரூ. 83 லட்சம் வழங்கப்படும். லீக் சுற்றைப் பொருத்தவரை ஒவ்வொரு ஆட்டத்திலும் வெற்றிபெறும் அணிக்கு ரூ. 33 லட்சம் வழங்கப்படும்.