மேற்கு இந்திய தீவில் நடந்த டி20 உலக கோப்பை கிரிக்கெட் போட்டியில் ரோகித் சர்மா தலைமையிலான இந்திய அணி இறுதிப்போட்டியில் தென் ஆப்பிரிக்காவை வீழ்த்தி சாம்பியன் ஆனது. இதற்காக உலகக்கோப்பை வென்ற இந்திய கிரிக்கெட் அணிக்கு இந்திய கிரிக்கெட் வாரியம் மொத்த பரிசுத்தொகை 125 கோடி அறிவித்தது. இந்த தொகையை வீரர்கள் மற்றும் அந்த குழுவில் இடம் பெற்றவர்கள் எப்படி பகிர்ந்து கொண்டார்கள் தெரியுமா?
விளையாட்டு வீரர்கள் 15 பேருக்கும், ஆளுக்கு 5 கோடி ரூபாய்.
தலைமை பயிற்சியாளர் திராவிட்டுக்கு 2.5 கோடி ரூபாய்.
தேர்வுக்குழுவினர் ஒவ்வொருவருக்கும் ஒரு கோடி ரூபாய்.
பிசியோதெரபிஸ்ட் 3 பேர், த்ரோடவுன் ஸ்பெஷலிஸ்ட் 3 பேர், மசாஜ் செய்வோர் 2 பேர், உடல் வலு பயிற்றுநர் ஆகியோருக்கு தலா 2 கோடி ரூபாய்.
ரிசர்வ் வீரர்களாக அறிவிக்கப்பட்ட நால்வருக்கும் தலா ஒரு கோடி ரூபாய்.