மலேசியாவில் நடைபெற்ற ஜூனியர் மகளிருக்கான டி20 கிரிக்கெட் உலகக்கோப்பை போட்டிகளில் இந்திய அணி கோப்பையை வெல்வதற்கு துணைபுரிந்த தமிழ்நாட்டு வீராங்கனை கமலினிக்கு உயரிய ஊக்கத்தொகையாக 25 லட்சம் ரூபாய்க்கான காசோலையை அவரது பெற்றோரிடம் முதல்வர் ஸ்டாலின் இன்று வழங்கினார். சென்னை கோட்டையில் இந்த நிகழ்ச்சி நடந்தது.
இதுபோல, புதுடெல்லியில் நடைபெற்ற முதல் கோ-கோ உலகக் கோப்பைவெல்வதற்கு துணைபுரிந்த தமிழ்நாட்டு வீரர் சுப்ரமணிக்கு உயரிய ஊக்கத்தொகையாக 25 லட்சம் ரூபாய்க்கான காசோலையையும் முதல்வர் ஸ்டாலின் வழங்கினார்.
இந்த நிகழ்ச்சியில் துணை முதல்வர் உதயநிதி, தலைமை செயலாளர் முருகானந்தம், விளையாட்டு மேம்பாட்டுத் துறை கூடுதல் தலைமைச் செயலாளர் அதுல்ய மிஸ்ரா, தமிழ்நாடு விளையாட்டு மேம்பாட்டு ஆணைய உறுப்பினர் செயலர் மேகநாத ரெட்டி ஆகியோரும் கலந்து கொண்டனர்.