Skip to content

இங்கிலாந்துடன் டி20: சென்னையில் 25ம் தேதி அடுத்த போட்டி

இங்கிலாந்து கிரிக்கெட்அணி இந்தியா வந்துள்ளது.  5 டி20 மற்றும்  3  ஒருநாள் போட்டிகளில் இங்கு விளையாடுகிறது.  நேற்று முதல் டி 20 போட்டி  கொல்கத்தாவில் நடந்தது.

டாஸ் வென்ற இந்திய அணி,   பவுலிங் தேர்வு செய்தது.  இங்கிலாந்து முதலில்பேட் செய்தது. 20 ஓவர் முடிவில் 10 விக்கெட்டுகளையும் இழந்து 132 ரன்கள் எடுத்தது.கேப்டன்  ஜாஸ் பட்லர் மட்டும் நிலைத்து நின்று ஆடி  44 பந்துகளில், 68 ரன்கள் எடுத்தார். மற்றவர்கள் சொற்ப ரன்களில் நடையை கட்டினர்.

அதைத்தொடர்ந்து 133 ரன் எடுத்தால் வெற்றி என்ற இலக்குடன் இந்தியா பேட்டிங் செய்தது. தொடக்க வீரர்களாக களமிறங்கிய சஞ்சு சாம்சன் , அபிஷேக் சர்மா இருவரும் அதிரடியாக விளையாடினர் . சஞ்சு சாம்சன் 26ரன்களில் வெளியேறினார். பின்னர் வந்த சூர்யகுமார் யாதவ் ரன் எதுவும் எடுக்காமல் ஆட்டமிழந்தார். மறுபுறம் அபிஷேக் சர்மா பந்துகளை பவுண்டரி, சிக்சருக்கு பறக்க விட்டார் . சிறப்பாக விளையாடி அரை சதமடித்த அவர் 79ரன்களில் வெளியேறினார்.தொடர்ந்து திலக் வர்மா அதிரடியாக விளையாடினார் இதனால் இந்திய அணி 12.5 ஓவர்களில் 3விக்கெட் இழப்பிற்கு 133 ரன்கள் எடுத்தது .இதனால் 7விக்கெட்  வித்தியாசத்தில் இந்தியா அபார வெறறி பெற்றது.

2வது டி20 போட்டி வரும் 25ம் தேதி சென்னையில் நடக்கிறது.  ”சென்னையில் நடைபெறும் இந்தியா – இங்கிலாந்து டி20 தொடரின்  போட்டிக்கான டிக்கெட்டுகளை வைத்திருப்பவர்கள் மெட்ரோ ரயிலில் வருவதற்கும் போட்டியை பார்த்து விட்டு திரும்ப செல்வதற்கும் இலவசம்” என தமிழ்நாடு  கிரிக்கெட் சங்கம்   அறிவித்துள்ளது.