இலங்கை கிரிக்கெட் அணி இந்தியாவில் சுற்றுப்பயணம் செய்து விளையாடி வருகிறது. ஏற்கனவே டி20 போட்டியை 2க்கு 1 என்ற கணக்கில் இந்தியா கைப்பற்றியது. அடுத்ததாக 3 ஒரு நாள் போட்டி கொண்ட தொடர் நடக்கிறது. முதல் போட்டி அசாம் மாநிலம் கவுகாத்தியில் இன்று மதியம் துவங்கியது. டாஸ் சென்ற இலங்கை, முதலில் பந்து வீச்சை தேர்வு செய்தது.
அதன்படி பேட் செய்த இந்திய வீரர்கள் அதிரடியாக விளாசி, ரன்களை குவித்தனர். விராட் கோலி 113, கேப்டன் ரோகித் சர்மா 83, சுப்மான் கில் 70 ரன்கள் எடுத்தனர். இது கோலிக்கு 45வது சதமாகும். இந்திய மண்ணில் 20 சதங்கள் அடித்து சச்சின் டெண்டுல்கரின் சாதனையை கோலி சமன் செய்துள்ளார். ஒரு நாள் கிரிக்கெட்டில் அதிக சதம் அடித்தவர்கள் பட்டியலில் 49 சதங்களுடன் சச்சின் முதலிடத்தில் உள்ளார். இதைத்தொடர்ந்து விளையாடிய இலங்கை, 21 ஓவர்கள் முடிவில் 112 ரன்னுக்கு 3 விக்கெட் இழந்து தடுமாற்றத்துடன் ஆடிக்கொண்டிருக்கிறது.
