Skip to content

கிரிக்கெட் முடிந்து திரும்பிய, 2 மாணவர்கள் விபத்தில் பலி

சென்னை சேப்பாக்கத்தில் நேற்று இரவு  சிஎஸ்கே, மும்பை  அணிகள் மோதின. இதை நேரில் பார்க்க சென்னை ராமாபுரம் பகுதியைச் சேர்ந்த கல்லூரி மாணவர்கள் கால்வின் கென்னி, சித்தார்த்தன் ஆகிய இருவரும் பைக்கில்  சென்றுள்ளனர்.

ஆலந்தூர் மெட்ரோவில் பைக்கை நிறுத்திவிட்டு அங்கிருந்த மெட்ரோ மூலம் சேப்பாக்கத்துக்கு சென்று ஐ.பி.எல். போட்டியை கண்டுள்ளனர்.  போட்டி முடிந்ததும், திரும்பி வந்த இருவரும் ஆலந்தூர்  மெட்ரோவில் பைக்கை எடுத்துவிட்டு, சாப்பிடுவதற்காக பைக்கில் அதிவேகமாக சென்றதாக கூறப்படுகிறது.
அப்போது திடீரென அவர்களது கட்டுப்பாட்டை இழந்த பைக், சாலையின் சென்டர் மீடியனில் மோதி விபத்துக்குள்ளானது. இதில் தலையில் பலத்த காயமடைந்த மாணவர்கள் இருவரும் சம்பவ இடத்திலேயே உயிரிழந்தனர். விபத்து குறித்து  பரங்கிமலை போக்குவரத்து புலனாய்வு பிரிவு போலீசார் உயிரிழந்த மாணவர்களின் உடலை மீட்டு  விசாரணை நடத்தினர்.

error: Content is protected !!