நாடு முழுவதும் நேற்று தீபாவளி பண்டிகை கொண்டாட்டப்பட்டது. இதை கொண்டாடும் வகையில் சனிக்கிழமை முதல் பட்டாசுகள் வெடித்து மக்கள் உற்சாகமடைந்தனர். பட்டாசு வெடிக்க விதிமுறைகள் , நேரம் ஒதுக்கப்பட்டிருந்தது. தமிழ் நாட்டில் விதிமுறைகளை மீறி பட்டாசு வெடித்ததற்காக 2,095 வழக்குகள் பதிவு செய்யப்பட்டுள்ளதாக காவல்துறை தெரிவித்துள்ளது. அனுமதிக்கப்பட்ட நேரத்தை தாண்டி பட்டாசு வெடித்தது, அதிக சத்தம் எழுப்பும் பட்டாசுகளை வெடித்தது உள்ளிட்ட காரணங்களுக்காக இந்த வழக்குப்பதிவு செய்யப்பட்டுள்ளது.