விருதுநகர் மாவட்டம் சாத்தூர் அருகே உள்ள முத்துதேவன்பட்டியில் உள்ள பட்டாசு ஆலையில் ஏற்பட்ட வெடிவிபத்தில் 10 பேர் பலியானார்கள். பலர் காயமடைந்தனர். இதுபற்றிய செய்தி அறிந்த தமிழக முதல்வர் மு.க. ஸ்டாலின், இறந்தவர்கள் குடும்பத்துக்கு ஆழ்ந்த இரங்கல் தெரிவித்தார். அத்துடன் இறந்தவர் குடும்பத்துக்கு தலா ரூ.3 லட்சமும், காயமடைந்தவர்களுக்கு தலா ரூ.1 லட்சமும் முதல்வர் நிவாரண நிதியில் இருந்த வழங்க முதல்வர் ஸ்டாலின் உத்தரவிட்டுள்ளார்.