விலைவாசி உயர்வு வேலையின்மை உள்ளிட்ட பல்வேறு கோரிக்கைகளை முன்வைத்து மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியினர் 150க்கும் மேற்பட்டோர் போராட்டத்தில் ஈடுபட்டனர். இந்த போராட்டத்தில் மாநில குழு உறுப்பினர் நாகராஜன் தலைமையில் மயிலாடுதுறை அருகே மாப்படுகை ரயில்வே கேட்டில் பகுதியில்
தண்டவாளத்தில் அமர்ந்து சென்னையில் இருந்து திருச்சி நோக்கி செல்லும் சோழன் எக்ஸ்பிரஸ் ரயிலை மறித்து போராட்டத்தில் ஈடுபட்டுள்ளனர்.