அரியலூர் மாவட்ட இந்தியக் கம்யூனிஸ்ட் கட்சி அலுவலகத்தில் அரியலூர் ஒன்றிய இந்திய கம்யூனிஸ்ட் கட்சிக் குழு கூட்டம் நடைபெற்றது. து.பாண்டியன் தலைமை வகித்தார். கூட்டத்தில் மாவட்டக் குழு உறுப்பினர் த. தண்டபாணி கலந்துகொண்டு, நடந்து முடிந்துள்ள தேர்தல் குறித்தும், கட்சி பணிகளில் தேவையான முன்னேற்றங்கள் குறித்தும் விளக்கிப் பேசினார். திருமானூர் ஒன்றிய முன்னாள் செயலாளர் ஜி.ஆறுமுகம் கலந்து கொண்டு மக்கள் பிரச்சனைகளில் கவனம் செலுத்துவது அவசியமாகும் என்று குறிப்பிட்டு பேசினார்.
ஒன்றிய செயலாளர் T.ராயதுரை, ஒன்றிய துணைச் செயலாளர்கள் மொ. மணி, ந.கோவிந்தசாமி, பொருளாளர் கு.வெள்ளையம்மாள் மற்றும் அரியலூர் நகர கிளை A.K. துரைராஜ், பெ. மணிகண்டன், கயர்லாபாத் கிளை பெ.பார்த்திபன், ஆலத்தியூர் கிளை கொ.சிவக்குமார் வைப்பம் கிளை கோ. மணிவேல், கல்லக்குடி கிளை ஆ.பெரியசாமி, ம. பசுபதி, கு.வனிதா, செல்வி, முருகேசன், சாந்தி, நாகமங்கலம், கிளை S. V.பிச்சைப் பிள்ளை எருத்துக்காரன்பட்டி கிளை R.மருதமுத்து, P. ரேவதி உட்பட ஒன்றியக் குழு உறுப்பினர்கள் பலர் கலந்து கொண்டனர்.
கூட்டத்தில் 2024ம் ஆண்டிற்கு உரிய உறுப்பினர் கார்டு வழங்கும் ஒன்றிய பேரவைக் கூட்டத்தை சிறப்பாக நடத்துவது.
அரியலூர் மருத்துவக் கல்லூரி மருத்துவமனைக்குள் MRI ஸ்கேன் வசதி கொண்டுவரப்படாமல் பழைய அரசு மருத்துவமனையில் வைத்துக்கொண்டு நோயாளிகளை அலைய வைக்கும் போக்கு, அரியலூர் நகரத்தினுள் எல்லா தெருகளும் குண்டும் குழியுமாக சீர்குலைந்து கிடக்கும் அவல நிலை, தளவாய் காவல் நிலையத்தில் பாதிக்கப்பட்ட மக்களின் புகார்களுக்கு தீர்வு காணப்படாத காவல்துறையின் மக்கள் விரோதப் போக்குகள் உள்ளிட்ட பல்வேறு கோரிக்கைகளை முன் வைத்து விரைவில் போராட்ட நடவடிக்கைகளை மேற்கொள்வது என்ற தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டது.
தோழர் T. ராயதுரை விருப்பத்தின் பேரில் புதிய ஒன்றிய செயலாளராக து. பாண்டியன் தேர்ந்தெடுக்கப்பட்டார்.