தஞ்சாவூர் மாவட்டம், பூதலூர் ஒன்றியம், வெண்டையம்பட்டி ஊராட்சிக்குட்பட்ட ராயமுண்டான்பட்டி புதுத்தெரு மக்களுக்கு குடிநீர், சுடுகாடு, பாதை வசதி செய்து தர பூதலூர் வட்டாட்சியர் மற்றும் வட்டார வளர்ச்சி அலுவலர்கள் அளித்த வாக்குறுதிகள் நிறைவேற்றப்படாததைக் கண்டித்து இந்திய கம்யூனிஸ்ட் கட்சி சார்பில் இன்று சாலை மறியல் நடந்தது.
தஞ்சாவூர்- திருச்சி தேசிய நெடுஞ்சாலை செங்கிப்பட்டியில் மறியல் போராட்டத்தை நடத்தினர். பூதலூர் ஒன்றிய
இந்திய கம்யூ. செயலர் இரா.முகில் தலைமை வகித்தார். இந்திய கம்யூனிஸ்ட் கட்சி மாவட்ட செயலர் முத்து உத்திராபதி, மாவட்ட துணை செயலாளர் கோ.சக்திவேல்,விவசாய சங்க மாவட்ட தலைவர் இரா.ராமச்சந்திரன், ஒரத்தநாடு ஒன்றிய செயலர் வாசு இளையராஜா, பட்டுக்கோட்டை ஒன்றிய செயலர் பூபேஸ் குப்தா,ஏஐடியூசி மாவட்ட செயலாளர் துரை. மதிவாணன் மற்றும் நிர்வாகிகள் கலந்து கொண்டனர். காலி குடங்களுடன் சாலையில் படுத்தும், பாடைகட்டியும் நூதன மறியல் போராட்டம் நடத்திய 50 பேரை போலீசார் கைது செய்து அழைத்து சென்றனர்.