இந்திய கம்யூனிஸ்ட் கட்சியின் மாநில செயலாளர் முத்தரசன் கோவையில் உள்ள கட்சி அலுவலகத்திலி் அளித்த பேட்டி:
கோவை ஈசா யோகா மையத்தில் பெண்கள் மற்றும் குழந்தைகளுக்கு எதிராக நடக்கும் செயல்களை கண்டித்தும், ஈஷா நிறுவனர் மீது நடவடிக்கை எடுக்க வலியுறுத்தியும் வரும் 23ம் தேதி இந்திய கம்யூனிஸ்ட் கட்சியின் மகளிர் அணி சார்பில் போராட்டம் நடைபெறும்.
கோவை ஈஷா அறக்கட்டளை, யோகா மையம் என்கிற பெயரில் பல ஆண்டுகளாக இயங்கி வருகிறது.இந்த யோகா மையத்தில் பெண்களுக்கு எதிரான தவறுகள் நடப்பதாக குற்றச்சாட்டுகள் எழுகின்றன. ஜக்கி வாசுதேவ் மீது ஏற்கனவே பல்வேறு வழக்குகள் உள்ளது.
பெண்கள் யோகா பயிற்சிக்காக சேர்க்கப்பட்டு மூளை சலவை செய்யப்படுகிறார்கள்.குடும்பத்தினரையே அந்த பெண்கள் சந்திக்க மறுக்கிறார்கள்.அண்மையில் லதா, கீதா என்ற பெண்களின் பெயர் மாற்றப்பட்டுள்ளது.பெண்களுக்கு அங்கு மொட்டை அடிக்கப்படுகிறது.வாசுதேவ் மகளுக்கு திருமணம் செய்து வைத்துள்ளார்கள். ஆனால் ஊரார் வீட்டு மகள்கள் மொட்டை அடிக்கப்படுகிறார்கள்.இது குறித்து விசாரணை நடத்த நீதிமன்ற கேட்டுள்ளது.
அங்கு ஆதிவாசிகள், பழங்குடி மக்கள் நிலங்கள் பறிக்கப்பட்டு ஈஷா மையத்தில் சேர்க்கப்பட்டிருப்பதாக அறிக்கை வருகிறது.வெளி நாட்டில் இருப்பவர்கள் அங்கு அனுமதி பெற்று தங்கி உள்ளார்கள் என்பது பற்றி தெரியாது.
யோகா மையத்தில் தகன மேடை இருப்பதற்கு என்ன அவசியம்?, அரசு அனுமதி உள்ளதா..? ஈசா யோகா மையம் நீர்வழி பாதைகள் ஆக்கிரமிப்பு செய்யப்பட்டுள்ளதாக தகவல்கள் வருகிறது.வன நிலத்தை ஏழை மக்கள் ஆக்கிரமிப்பு செய்திருந்தால் உடனே வெளியேற்றப்படுகிறார். அப்போது ஈஷாவிற்கு மட்டும் யார் அனுமதி கொடுத்தது?ஈஷா மீது பொது விசாரணை மேற்கொள்ளப்பட வேண்டும்.அங்குள்ள பெண் குழந்தைகள் பெற்றோரிடம் ஒப்படைக்க நடவடிக்கை எடுக்க வேண்டும்.ஈஷா நிறுவனர் மீது உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும்.
இந்த கோரிக்கையை வலியுறுத்தி வரும் 23ம் தேதி கோவை சிவானந்தா காலனி பகுதியில் பெரும் திரள் ஆர்ப்பாட்டம் நடைபெற உள்ளது.
ஈஷா நிறுவனரை பாதுக்காப்பது ஒன்றிய அரசு தான்.மணிப்பூரை பார்க்க பிரதமர் செல்லவில்லை ஆனால் ஈஷா வருகிறார்.ஈஷாவிற்கும் எங்களுக்கும் பகை கிடையாது அங்கு நடக்கும் செயல்களை தான் கண்டிக்கிறோம்.
இவ்வாறு அவர் கூறினார்.