பாஜ தலைமையிலான தேசிய ஜனநாயக கூட்டணிக்கு எதிராக எதிர்க்கட்சிகளால் இண்டியா உருவாக்கப்பட்டுள்ளது. இந்த கூட்டணியில் காங்கிரஸ் உள்ளிட்ட 26 கட்சிகள் உள்ளனர். இதில் கம்யூ கட்சிகளும் அடங்கும். இந்த நிலையில் உபியில் இண்டியா கூட்டணியினர் போட்டியிடும் இடங்களில் இண்டியா கட்சியினர் போட்டியிடும் நிலை ஏற்பட்டுள்ளது. இந்திய கம்யூனிஸ்ட் கட்சி தங்கள் கூட்டணியின் முக்கிய உறுப்பினர் களான சமாஜ்வாதி மற்றும் காங்கிரஸை எதிர்த்து போட்டியிடுகிறது. உ.பி.யில் ராபர்ட்கன்ச், லால்கன்ச், கோசி, பாந்தா, பைசாபாத், தவுர்ஹரா ஆகிய 6 தொகுதிகளில் இக்கட்சி போட்டியிடுகிறது. உ.பி.யின் தனித் தொகுதியான ஷாஜஹான்பூரிலும் இக்கட்சி வேட்பாளரை அறிவித்தது. ஆனால் அவரது வேட்புமனு நிராகரிக்கப்பட்டு விட்டதால் அங்கு போட்டியிடவில்லை. துக்தி சட்டப்பேரவை தொகுதி இடைத்தேர்தலிலும் அக்கட்சி போட்டியிடுகிறது.