திமுக கூட்டணியில் இடம் பெற்றுள்ள இந்திய கம்யூனிஸ்ட் கட்சியுடன் இன்று தொகுதி உடன்பாடு ஏற்பட்டது. அந்த கட்சிக்கு 2 தொகுதிகள் ஒதுக்கீடு செய்து இன்று மதியம் ஒப்பந்தம் கையெழுத்தாக உள்ளது. அதே நேரத்தில் தொகுதிகள் முடிவு செய்யப்படவில்லை. தற்போது இந்திய கம்யூனிஸட் சிட்டிங் தொகுதிகளான நாகை(தனி) திருப்பூர் தொகுதிகளை மீண்டும் கேட்டு உள்ளது. தொகுதி ஒதுக்குவது இன்னும் 2 நாளில் முடிவு செய்யப்படும் என அறிவிக்கப்பட்டது. பேச்சுவார்த்தையில் ஈடுபட்ட எம்.பி. சுப்பராயன் இதனை தெரிவித்தார்.
அதைத்தொடர்ந்து மார்க்சிய கம்யூனிஸ்ட் கட்சியுடன் பேச்சுவார்த்தை தொடங்கியது. இவர்களுடனும் இன்று ஒப்பந்தம் ஏற்பட வாய்ப்பு உள்ளது.