அரியலூர் மாவட்டம் ஜெயங்கொண்டம் அருகே இலையூர் தெற்குவெளி கிராமத்தைச் சேர்ந்தவர் தங்கமணி. இவர் வளர்த்து வந்த பசுமாடு இலையூர் வயல்வெளியில் உள்ள ஒரு தரைமட்ட 40 அடி ஆழமுள்ள கிணற்றில் பசுமாடு தண்ணீரில் தத்தளித்து உயிருக்கு போராடிக் கொண்டிருந்தது. இது குறித்து தங்கமணி ஜெயங்கொண்டம் தீயணைப்பு நிலையத்திற்கு தகவல் தெரிவித்துள்ளார். தகவல் அறிந்து அங்கு வந்த தீயணைப்பு வீரர்கள் பொதுமக்கள் உதவியுடன் கிணற்றில் கயிறு கொண்டு இறங்கி உயிருக்கு போராடிக் கொண்டிருந்த பசுமாட்டின்
மீது கயிறை கட்டி லாவகரமாக கிணற்றிலிருந்து உயிருடன் மீட்டு உரிமையாளரிடம் ஒப்படைத்தனர்..
இதேபோல் ஜெயங்கொண்டம் அருகே மேலூர் கிராமத்தைச் சேர்ந்த கலியபெருமாள் வளர்த்து வந்த செல்லப் பிராணியான பூனையை கடந்த இரண்டு நாட்களாக காணாமல் பல இடங்களில் தேடியுள்ளார் இந்நிலையில் வயல்வெளியில் உள்ள தண்ணீர் இல்லா கிணற்றில் பூனை விழுந்திருப்பதை அறிந்த கலியபெருமாள் தீயணைப்பு துறைக்கு தகவல் தெரிவித்தார் அங்கு வந்த தீயணைப்புத் துறையினர் ஏணி மூலம் கிணற்றில் இறங்கி பூனையை லாவகமாக பிடித்து உரிமையாளரிடம் ஒப்படைத்தனர்