கும்பகோணம் அருகே திருவிடைமருதூர் அடுத்த நாச்சியார்கோவில் காவல் நிலைய எல்லைக்கு உட்பட்ட பகுதிகளில் போலீஸார் இன்று வாகனத் தணிக்கையில் ஈடுபட்டிருந்தனர். ஆகாச மாரியம்மன் கோயில் பகுதியில் சோதனை நடத்திக் கொண்டிருந்தபோது, அவ்வழியே வந்த மினி சரக்கு வாகனத்தை நிறுத்தி சோதனை இட்டனர். அப்போது இறந்து இரண்டு நாட்களான பசு மாடு ஒன்றை, கோரைப் புற்களைப் போட்டு மறைத்து கொண்டு வந்திருப்பது தெரிய வந்தது. இது தொடர்பாக மினி வேன் ஓட்டுநர், உட்பட இருவரிடம் போலீஸார் விசாரணை நடத்தியதில் அவர்கள் முன்னுக்குப் பின் முரணாக பதில் அளித்துள்ளனர்.
இந்த சம்பவம் கும்பகோணம் சுற்றுவட்டார பகுதிகளில் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. பொதுவாக மாட்டு இறைச்சி கறிக்காக, பசு மாடுகள் மற்றும் இளம் கன்றுகளை கொல்லக்கூடாது என்பது விதியாக இருந்து வருவது குறிப்பிடத்தக்கது.