திருச்சி மாவட்டம் துறையூர் அடுத்துள்ள உப்பிலியபுரம் ஊராட்சி ஒன்றியத்திற்கு உட்பட்ட ஆ. கருப்பம்பட்டி பகுதியில் வசிப்பவர் முத்துகிருஷ்ணன்.
இவர் தனது தோட்டத்தில் பசு மாடுகளை வைத்து பால் வியாபாரம் செய்து வருகிறார். வழக்கம் போல் இன்று மாடுகளை வயலில் கட்டி வைத்திருந்தார் .
அப்பொழுது ஒரு மாட்டை கிணற்றின் அருகே கட்டி போட்டுள்ளார்.
கிணற்றின் அருகே கட்டி வைக்கப்பட்டிருந்த மாடு புற்களை மேய்ந்து கொண்டிருக்கும் பொழுது
கால் தவறி கிணற்றுக்குள் விழுந்தது.
இதனை அடுத்து உப்பிலியபுரம் தீயணைப்புத் துறையினருக்கு தகவல் அளிக்கப்பட்டது .
தீயணைப்பு துறையினர் சம்பவ இடத்திற்கு விரைந்து சென்று கிணற்றில் விழுந்த பசுமாட்டின் கண்களை துணியால் கட்டினர் பின்னர் பொதுமக்கள் உதவியுடன் 2 மணிநேரம் போராடி மாட்டை உயிருடன் கிணற்றில் இருந்து மீட்டனர்.