சீனா, அமெரிக்கா உள்ளிட்ட நாடுகளில் உருமாறிய புதிய வகை கொரோனா பிஎப்7 வேகமாக பரவி வருகிறது. இந்த வகை கொரோனா இந்தியாவிலும் இதுவரை 7 பேரை பாதித்து உள்ளது. ஆனால் தமிழகத்தில் இதுவரை இந்த கொரோனா தாக்குதல் இல்லை. இந்த நிலையில் புதிய வகை கொரோனாவை தடுத்து நிறுத்துவது குறித்தும், அதற்கான முன்னேற்பாடு பணிகள் குறித்து ஆய்வு செய்யவும் முதல்வர் மு.க.ஸ்டாலின் தலைமையில் இன்று ஆலோசனைக்கூட்டம் நடந்தது.
இதில் அமைச்சர் மா.சுப்பிரமணியன், தலைமை செயலாளர் இறையன்பு, டிஜிபி சைலேந்திரபாபு மற்றும் துறை செயலாளர்கள் பங்கேற்றனர். இந்த கூட்டத்தில் பல முக்கிய முடிவுகள் எடுக்கப்பட்டன.
வெளிநாடுகளில் இருந்து தமிழகத்திற்கு வரும் பயணிகளுக்கு விமான நிலையத்தில் பரிசோதனை நடத்தி தொடர்ந்து கண்காணிக்க முடிவு செய்யப்பட்டது.
எனவே மீண்டும் விமான நிலையங்களில் கொரோனா டெஸ்ட் எடக்கும் பணி தொடங்கப்பட உள்ளது.