கோவையில் இன்று தமிழ்நாடு மின்சாரம், மதுவிலக்கு மற்றும் ஆயத்தீர்வைத்துறை அமைச்சர் செந்தில்பாலாஜி, தமிழ்நாடு போக்குவரத்துத் துறை அமைச்சர் சிவசங்கர் ஆகியோர் கலந்து கொண்டு 6 புதிய வழித்தட பேருந்துகள் உள்ளிட்ட 27 புதிய தாழ்தள சொகுசு பேருந்துகளை துவக்கி வைத்தும், பேருந்து ஓட்டுநர்கள், நடத்துனர்கள் உள்ளிட்ட போக்குவரத்து பணியாளர்கள் 32 பேருக்கு பணி நியமன ஆணைகளையும் வழங்கினர். இவ்விழாவில் கலந்து கொண்டு அமைச்சர் செந்தில்பாலாஜி பேசியதாவது.. தமிழ்நாடு முதல்வராக தளபதி அவர்கள் பொறுப்பேற்றவுடன் புதிய பேருந்துகள் 814 பேருந்துகள் வாங்க ஒப்பந்தம் செய்யப்பட்டு, தற்போது, 274 புதிய பேருந்துகள் தற்போது பெறப்பட்டுள்ளது. அதில், இன்று 27 புதிய பேருந்துகள் துவங்கப்பபட்டும், பேருந்து ஓட்டுநர்கள், நடத்துனர்கள் என 32 பேருக்கு பணி நியமன ஆணை வழங்கும் விழா நடைபெறுகின்றது. முதல்வரின் சிறப்பு வாய்ந்த திட்டங்களில் விடியல் பயணம் திட்டம், ஒட்டுமொத்த தாய்மார்களின் அன்பையும் ஆசியும் பெற்று சிறப்பாக செயல்பட்டு வருகின்றது. இதற்கு போக்குவரத்து தொழிலாளர்கள் தான் காரணம். போக்குவரத்துத் துறை அமைச்சர், போக்குவரத்து துறை தொடர்பானவற்றை முதல்வரின் கவனத்திற்கு எடுத்து சென்று திட்டங்கள் நிறைவேற்றப்பட்டு வருகின்றது. இதற்கு மாவட்ட மக்கள், மாவட்ட நிர்வாகம் சார்பில் நன்றி தெரிவித்துக் கொள்கிறேன் என்றார். இவ்விழாவில் அமைச்சர் சிவசங்கர், மாவட்டக்கலெக்டர் கிராந்திகுமார் பாடி, மாநகராட்சி கமிஷனர் சிவகுரு பிரபாகரன், மேயர் ரங்கநாயகி, துணை மேயர் வெற்றிச்செல்வன், போக்குவரத்து துறை பொது மேலாளர் செல்வகுமார், தெற்கு மாவட்ட செயலாளர் தளபதி முருகேசன், வடக்கு மாவட்ட செயலாளர் தொ.அ.ரவி உள்ளிட்ட பலர் கலந்துகொண்டனர்.