செல்போன் ஒட்டியபடி அதிவேகத்தில் கார் ஓட்டிய டிடிஎப் வாசன் அதை சமூக வலைதளத்தில் வெளியிட்டார். அதன்பேரில் அவ ரை மதுரை போலீசார் கைது செய்து மதுரை குற்றவியல் கோர்ட்டில் இன்று ஆஜர்படுத்தினர். வளரும் இளைஞர், சினிமாவில் நடிக்க உள்ளார். மன்னிப்பு கூட கேட்கிறோம் விட்டு விடுங்கள் என வாசன் வழக்கறிஞர் கூறினார்.
தொடர்ந்து அரசு தரப்பு வழக்கறிஞர், “கார் ஓட்டுநர் உரிமம் பெற எல்.எல்.ஆர். மட்டுமே வைத்துள்ள வாசன், தேசிய நெடுஞ்சாலையில் வாகனத்தை இயக்கியுள்ளார் என வாதிட்டார்.
இரு தரப்பு வாதங்களையும் கேட்ட நீதிபதி, டிடிஎப் வாசனுக்கு ஜாமீன் வழங்கி உத்தரவிட்டார். மேலும், இதுபோன்று செயலில் ஈடுபட மாட்டேன் என மன்னிப்பு கோரி வீடியோ வெளியிட வேண்டும் என்றும் உத்தரவிட்டார்.