ஆரூத்ரா கோல்டு மோசடி விவகாரத்தில் பாஜக நிர்வாகியும், நடிகருமான ஆர்.கே.சுரேசுக்கு தொடர்பு இருப்பதாக கூறி ஆவரது வங்கி கணக்கு முடக்கம் செய்யப்பட்டது. இந்நிலையில், வங்கி கணக்கு முடக்கத்தை எதிர்த்து நடிகர் ஆர்.கே.சுரேஷ் சென்னை உயர்நீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்துள்ளார். இந்த வழக்கு விசாரணை இன்று நடந்த போது, வங்கி கணக்கு முடக்கம் தொடர்பான ஆவணங்கள் தமிழ்நாடு முதலீட்டாளர்கள் பாதுகாப்பு சட்ட சிறப்பு நீதிமன்றத்தில் தாக்கல் செய்யப்பட்டுவிட்டதாக காவல்துறை சார்பில் தெரிவிக்கப்பட்டது. இதையடுத்து, தமிழ்நாடு முதலீட்டாளர்கள் பாதுகாப்பு சட்ட சிறப்பு நீதிமன்றத்தை நாட ஆர்.கே.சுரேசுக்கு உயர்நீதிமன்றம் உத்தரவிட்டது.