திருச்சி பேங்கர்ஸ் காலனி தேவராயநகரை சேர்ந்த கண்ணன் மகன் காமராஜ். இவரது மனைவி இளையரசி(45). நடத்தை சந்தேகத்தில் கடந்த 2018ம் ஆண்டு காமராஜ், மனைவியை கொலை செய்தார். அப்போது சோமரசம்பேட்டை காவல் நிலையத்தில் இன்ஸ்பெக்டராக பணியாற்றியவரும், தற்போது ரயில்வே டிஎஸ்பியாக இருப்பவருமான பிரபாகரன் வழக்குப்பதிவு செய்து காமராஜை கைது செய்தார்.
இந்த வழக்கு திருச்சி மகளிர் நீதிமன்றத்தில் நடந்து வந்தது. வழக்கை விசாரித்த நீதிபதி ஸ்ரீவத்சன், 302வது பிரிவில் காமராஜுக்கு ஆயுள் தண்டனை, ரூ.10,000 அபராதம், 498 ஏ பிரிவில் 3 ஆண்டு சிறை தண்டனை, ரூ.5,000 அபராதம் விதித்து தீர்ப்பளித்தார். மேலும் இவற்றை ஏக காலத்தில் அனுபவிக்கவும் உத்தரவிட்டார். அரசு தரப்பில் வழக்கறிஞர் ஷாகீர் உசேன் ஆஜரானார்.