Skip to content
Home » கல்லூரிக்குள் புகுந்து ரகளை.. மதுரை பொறியியல் மாணவர் பரிட்சை எழுத கோர்ட் 20 நாள் பரோல்..

கல்லூரிக்குள் புகுந்து ரகளை.. மதுரை பொறியியல் மாணவர் பரிட்சை எழுத கோர்ட் 20 நாள் பரோல்..

மதுரை நரிமேடு பகுதியில் உள்ள பெண்கள் கல்லூரிக்குள் கடந்த ஆண்டு அக்டோபர் மாதம் 30-ந்தேதி மோட்டார் சைக்கிள்களுடன் புகுந்த சில இளைஞர்கள் அங்கிருந்த மாணவிகளிடம் தகாத வார்த்தைகளில் பேசியும், கல்லூரி காவலாளியை தாக்கவும் செய்தனர். இதனைக்கேட்ட மாணவியின் தந்தையையும் அவர்கள் தாக்கினர். இந்த சம்பவம் குறித்த வீடியோ சமூக வலைதளங்களில் வைரலாக பரவியது. அதன்பேரில் தல்லாகுளம் போலீசார் வழக்குப் பதிவு செயது பலரை கைது செய்தனர். இவர்களில் கல்லூரி மாணவர்கள் உள்பட சிலரை கைது செய்தனர், சிலர் மீது குண்டர் சட்டத்தின் கீழ் வழக்கு பதிவு செய்யப்பட்டது.  இந்த நிலையில் குண்டர் சட்டத்தில் கைதான என்ஜினீயரிங் மாணவர் ஒருவருக்கு இறுதி ஆண்டு செமஸ்டர் தேர்வு எழுதவும், அவர் மருத்துவ சிகிச்சை பெறுவதற்காகவும் பரோல் வழங்கி உத்தரவிட வேண்டும் என்று அவரது தந்தை மதுரை ஐகோர்ட்டில் மனுத்தாக்கல் செய்திருந்தார். இந்த மனு நீதிபதிகள் எம்.எஸ்.ரமேஷ், பி.டி.ஆஷா ஆகியோர் முன்பு விசாரணைக்கு வந்தது. நேற்று  நீதிபதிகள் பிறப்பித்த உத்தரவு வருமாறு:- மனுதாரர் மகன் என்ஜினீயரிங் பட்டப்படிப்பில் இறுதி செமஸ்டர் தேர்வு எழுத வேண்டியுள்ளதால் ஜூன் 1-ந் தேதி முதல் 20-ந் தேதி வரை அவருக்கு பரோல் வழங்கப்படுகிறது. அவருக்கு பாதுகாப்பு பணியில் ஈடுபடும் போலீசாருக்கு உரிய கட்டணத்தை மனுதாரர் ஏற்க வேண்டும். மனுதாரர் மகனுக்கு மருத்துவ சிகிச்சை தேவைப்பட்டால் எடுத்துக் கொள்ளலாம். அப்போதும் போலீசார் பாதுகாப்பில் இருக்க வேண்டும். பரோல் முடிந்ததும் வருகிற 21-ந் தேதி மனுதாரர் மகன் மதுரை சிறை சூப்பிரண்டு முன்பு சரண் அடைய வேண்டும்.

 

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *