திருச்சி மாவட்டம் மணப்பாறை அருகே வயதான தம்பதியை கட்டிப் போட்டு 21 சவரன் நகை, பணம் கொள்ளையடிக்கப்பட்ட சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
திருச்சி மாவட்டம், மணப்பாறையை அடுத்த எம்.இடையபட்டியைச் சேர்ந்தவர் மகாலிங்கம் (70). இவரது மனைவி கமலவேணி (60). இருவரும் தங்களது வீட்டில் இரவு தூங்கிக் கொண்டிருந்த போது வீட்டில் இருந்த நாய் சப்தம் போட்டுக் கொண்டே இருக்கவே மகாலிங்கம் எழுந்து வந்து வீட்டிற்கு வெளியே ஒவ்வொரு புறமாக பார்த்துள்ளார். அப்போது ஒரு பகுதியில் மறைந்திருந்த முடிமூக அணிந்திருந்த மர்ம நபர் மகாலிங்கத்தை தாக்கி அவரது கைலியை கிழித்து அதை கயிறு போல் மாற்றி கை மற்றும் கால்களை கட்டி போட்டு விட்டு அவரது மனைவியையும் செல்லோ டேப் மூலம் கட்டி வைத்து விட்டு கமலவேணி கழுத்தில் அணிந்திருந்த 6 சவரன் நகையும், வீட்டில் பிரோவில் இருந்த 15 சவரன் என மொத்தம் 21 சவரன் நகையும், சுமார் 5 ஆயிரம் பணத்தையும் கொள்ளையர்கள் கொள்ளையடித்துச் சென்றுள்ளனர்.