தேனி மாவட்டம் அன்னஞ்சி கிராமத்தைச் சேர்ந்த வர் சற்குணம் (50). விவசாயி. இவரது மனைவி வனிதா (40). இவர்களுக்கு ரமேஷ் குமார் (28) என்ற மகன் உள்ளார். இவர் கோவை மாவட்டம் கிணத்துக்கடவு அருகே உள்ள கல்லாபுரத்தில் ஒரு பெண்ணை திருமணம் செய்து கொண்டு அதே பகுதியில் குத்தகைக்கு விவசாய நிலம் எடுத்து விவசாயம் மேற்கொண்டு வருகிறார்.
இந்தநிலையில் சற்குணம் சொந்த ஊரில் அடிக்கடி மது குடித்து வந்ததால் ரமேஷ் குமார் தனது தந்தை சற்குணம், தாயார் வனிதா ஆகிய 2 பேரையும் கல்லாபுரத்திற்கு அழைத்து வந்தார். இதையடுத்து சற்குணமும், ரமேஷ்குமாரும் விவசாயம் செய்து வந்தனர். ஆனாலும் சற்குணத்தால்குடிப்பழக்கத்தை விடமுடிய வில்லை. இதனால் வாழ்க்கையில் வெறுப்படைந்த சற்குணம் தென்னை மரத்திற்கு பயன்ப டுத்தும் பூச்சிமருந்தை (விஷம்) குடித்தார். இதை அவரின் மனைவியிடம் தெரிவித்தார். இதையடுத்து வனிதாவும் அதே விஷத்தை குடித்தார். இதனால் அவர்கள் 2 பேரும் வாயில் நுரைதள்ளியபடி மயங்கி கிடந்தனர்.
இதனை கவனித்த அக்கம் பக்கத்தினர், கணவன்- மனைவி 2 பேரையும் மீட்டு சிகிச்சைக்காக பொள்ளாச்சி அரசு ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்தனர். அங்கிருந்து மேல் சிகிச்சைக்காக கோவை அரசு ஆஸ்பத்திரிக்கு கொண்டு செல்லப்பட் டனர். அங்கு அவர்களுக்கு தீவிர சிகிச்சை அளிக்கப்பட் டது. ஆனால் சிகிச்சை பல னின்றி கண வன்-மனைவி 2 பேரும் பரி தாபமாக இறந்தனர். இதுகுறித்து கிணத்துக்கடவு போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்