ஈரோடு கிழக்கு தொகுதியில் காங்கிரஸ், அதிமுக வேட்பாளர்கள் உள்பட 77 பேர் போட்டியிடுகிறார்கள். 16 மேஜைகளில் ஓட்டு எண்ணிக்கை நடைபெற்று வருகிறது. முதல் சுற்று ஓட்டு எண்ணிக்கை முடிந்ததும் 77 வாக்காளர்களும் வாங்கிய ஓட்டுகள், பதிவான ஓட்டுகள் எல்லாம் சரியாக உள்ளதா என சரி பார்த்த பிறகு தான் அதை அதிகாரப்பூர்வமாக அறிவிப்பார்கள். அதிகாரப்பூர்வ அறிவிப்பு வெளியாகாததால் மூன்றாம் சுற்று வாக்கு எண்ணிக்கை சற்று நேரம் நிறுத்தப்பட்டது.
இது குறித்து ஈரோடு மாவட்ட கலெக்டரும், மாவட்ட தேர்தல் அதிகாரியுமான கிருஷ்ணன் உண்ணியிடம் பத்திரிகையாளர்கள் சரமாரி கேள்வி எழுப்பினர். அப்போது அவர் கூறியதாவது:
முதல் சுற்று ஓட்டு எண்ணிக்கை அதிகாரப்பூர்வமாக அறிவிக்கப்பட்ட பிறகு, 3வது சுற்று எண்ணிக்கை தொடங்கும். வாக்கு எண்ணிக்கையில் எந்த தாமதமும் இல்லை. தேர்தல் ஆணைய வதிமுறைப்படி வாக்கு எண்ணிக்கை நடந்து வருகிறது.
இவ்வாறு அவர் கூறினார்.