Skip to content

கோவையில் கவுன்சிலர்கள் பேரூராட்சி நுழைவாயில் முன்பு தர்ணா …

  • by Authour

கோவை மாவட்டம், ஆனைமலை ஒன்றியத்துக்கு உட்பட்ட கோட்டூர் பேரூராட்சியில் உள்ள 21 வார்டுகளில் 30 ஆயிரத்துக்கும் மேற்பட்டோர் வசித்து வருகிறார்கள். திமுகவைச் சேர்ந்த ராமகிருஷ்ணன் பேரூராட்சி தலைவராகவும் துணைத் தலைவராக கிருஷ்ணவேணியும் உள்ளனர். இந்நிலையில் இன்று காலை கவுன்சிலர்களுக்கு அழைப்பு விடுக்காமல் அவசரக் கூட்டம் நடத்தியதாக கூறப்படுகிறது. இது குறித்து தகவல் அறிந்து வந்த பத்துக்கு மேற்பட்ட கவுன்சிலர்கள் பேரூராட்சி நுழைவாயில் கதவை பூட்டி தர்ணா போராட்டத்தில் ஈடுபட்டனர். மேலும் இன்று நடந்த கூட்டத்தில் நிறைவேற்றப்பட்ட தீர்மானத்தை ரத்து செய்ய வலியுறுத்தி பேரூராட்சி செயல் அலுவலர் ஜெசிமா பானுவை முற்று கேட்டு வாக்குவாதத்தில் ஈடுபட்டனர். திமுக கவுன்சிலர்கள் பெரும்பான்மையாக உள்ள கோட்டூர் பேரூராட்சியில் திமுக தலைவரை எதிர்த்து திமுக கவுன்சிலர்கள் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டது பெரும் பரபரப்பு ஏற்படுத்தியது

அவசர கூட்டத்திற்கு கவுன்சிலர்களை அழைக்காததால் தர்ணா போராட்டத்தில் ஈடுபட்டு செயல் அலுவலரிடம் வாக்குவாதம். பொள்ளாச்சி- மார்ச்-16 பொள்ளாச்சி அருகே உள்ள கோட்டூர் பேரூராட்சி 30 ஆயிரத்துக்கு மேற்பட்ட பொதுமக்கள் வசித்து வருகின்றனர்,21 வார்டுகள் உள்ளடக்கிய பகுதியாகும் இங்கு திமுகவைச் சேர்ந்த ராமகிருஷ்ணன் என்பவர் தலைவராக உள்ளார் துணை தலைவராக கிருஷ்ணவேணி பதவி வகித்து வருகிறார்,இதில் ஏடிஎம்கே,காங்கிரஸ், சுயேச்சை என மூன்று கவுன்சிலர்கள் உள்ளனர்,இன்று பேரூராட்சியில்

அவசரக் கூட்டம் நடைபெற்றது இந்த கூட்டத்திற்கு முறையாக கவுன்சிலர்களுக்கு அஜந்தா அனுப்பாமல் புறக்கணித்ததாக கூறி கவுன்சிலர்கள் பேரூராட்சி அலுவலக நுழைவாயில் பூட்டி தர்ணா போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர் . மேலும் தங்களது கையெழுத்துக்களை போலியாக போட்டதாகவும் மீண்டும் அழித்து விட்டதாகவும் கூறி செயல் அலுவலர் ஜெசிமா பானுவை முற்றுகையிட்டு வாக்குவாதத்தில் ஈடுபட்டு வருகின்றனர்,இன்று மாலை தேர்தல் அறிவித்துள்ள நிலையில் திமுக கவுன்சிலர்கள் தர்ணா போராட்டத்தில் ஈடுபட்டு வருவது குறிப்பிடத்தக்கது.

 

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

error: Content is protected !!