கரூர் மாவட்டம் வெள்ளியணை ஊராட்சிக்குட்பட்ட ஓந்தாம்பட்டி கிராமத்தில் சுமார் 150 குடும்பத்தை சேர்ந்த 400க்கும் மேற்பட்டோர் வசித்து வருகின்றனர். அந்த பகுதியில் கடந்த இரண்டு மாதங்களாக காவிரி கூட்டுக் குடிநீர் சரியாக வருவதில்லை எ, இது குறித்து சம்பந்தப்பட்ட அதிகாரிகளிடமும், ஊராட்சி தலைவருக்கும், முதலமைச்சர் தனிப்பிரிவிற்கும், மாவட்ட ஆட்சியருக்கும் பலமுறை மனு அளித்தும் எந்த நடவடிக்கையும் எடுக்கவில்லை எனக் அந்த பகுதி மக்கள் கூறுகிறார்கள்.
எனவே காவிரி கூட்டு குடிநீர் வழங்க உரிய நடவடிக்கை எடுக்காத காரணத்தால் போராட்டம் நடத்த அனுமதி வழங்க வேண்டி மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் நடைபெறும் மக்கள் குறைதீர்க்கும் நாள் கூட்டத்தில் வெள்ளியணை ஊராட்சி 11வது வார்டு கவுன்சிலர் கனகராஜ் மனு வழங்கினார். தங்கள் பகுதிக்கு முறையாக குடிநீர் வழங்கவில்லை என்பதை கண்டித்து, வார்டு கவுன்சிலர் மாவட்ட ஆட்சியரிடம் புகார் மனு அளித்தது பரபரப்பு ஏற்படுத்தியது.