Skip to content
Home » கவுன்சிலர் மனைவி 100 பேருடன் வந்து புதுகை எஸ்.பியிடம் மனு

கவுன்சிலர் மனைவி 100 பேருடன் வந்து புதுகை எஸ்.பியிடம் மனு

புதுக்கோட்டை  மாவட்டம் கறம்பக்குடி ஒன்றிய15வது வார்டு சுயேட்சை உறுப்பினர்
தனவந்தன்.இவர்  பொலிரோபிக்கப்வேனில் மணல் கடத்தியதாக  கறம்பக்குடி போலீசார்  வழக்குப்பதிவு செய்து ள்ளனர் .
இந்த நிலையில் கறம்பக்குடி  போலீஸ் இன்ஸ்பெக்டர் செந்தூர்பாண்டியன்,  எஸ்.ஐ. கோபிநாத் ஆகியோர்
மணல் கடத்தலில் தனவந்தன்ஈடுபட்ட தாக கூறி ஊராட்சி ஒன்றிய அலுவலகத்தில் இருந்த தனவந்தனை கைதுசெய்து தாக்கியதாகவும் கூறப்படுகிறது.  இந்த நிலையில் தனவந்தன்  மனைவி ஆர்த்தி இன்று 100 பேருடன் புதுக்கோட்டை எஸ்.பி. அலுவலகம் வந்து எஸ்.பி. வந்திதா பாண்டேவிடம் ஒரு மனு கொடுத்தார். அதில்  உயர் சாதியினர் சிலரது தூண்டுதலின் பேரில் என் கணவர் மீது போலீசார் பொய் வழக்கு போட்டு உள்ளனர் என கூறி உள்ளார். ஆர்த்தி இன்று  வழக்கறிஞர்கள் மற்றும் 100 பொதுமக்களுடன் எஸ்.பி அலுவலகம் வந்ததை அறிந்த போலீசார் கணேஷ்நகர் இன்ஸ்பெக்டர் ஜாபர்  தலைமையில் பலத்த பாதுகாப்பு ஏற்பாடுகள் செய்திருந்தனர்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *